இந்தியாவில் சமீப காலமாக மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பு.. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் புகார்
இந்தியாவில் சமீப காலமாக மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் அதை அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2+2 சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.
அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய பிளிங்கென், இந்தியாவில் சில அரசுகள் மற்றும் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளால் சமீப காலங்களாக மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அதை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
எனினும் அது பற்றிய விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட ஜனநாயக மாண்புகள் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து அமெரிக்கா இணைந்து பங்காற்றி வருவதாகவும் கூறினார்.
Comments