'இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவால் பாதிக்காது..' ராஜ்நாத் சிங் உறுதி..!
இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவிற்கு ரஷ்யாவால் பாதிப்பு ஏற்படாது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்..
5 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இந்நிலையில், வாஷிங்டன் நகரில் பேசிய அவர், இந்தியா - அமெரிக்க இடையிலான நல்லுறவுகளுக்கு ரஷ்யாவால் பாதிப்பு ஏற்படாது என்றார்.
மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இயற்கையிலேயே நட்பு நாடுகள் என்பதும், தமது உறவுகள் மிகவும் நிலையானது என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும் என்றும் அவர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். அதேபோல், உலகின் வேறொரு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், உக்ரைனில் நடைபெறும் போரால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் பிரச்சனைகள் வராது என்றும், எவ்விதமான பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் வலிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டவே இந்தியா விரும்புவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
மேலும், 2+2 பேச்சுவார்த்தையின்போது, உலக நாடுகளுக்காக இந்தியாவில் தளவாட உற்பத்தியை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளதக தகவல் வெளியாகி உள்ளது.
Comments