பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!
பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷரீப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் இல்லாத அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும் பிராந்தியத்தை இந்தியா விரும்புவதாகவும், அதற்குரிய நோக்கங்கள் மற்றும் சவால்களில் கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் வளமையான வாழ்வை அடைய முடியமென என பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷரீப் தன் முதல் உரையில், அதிக இணக்கமுள்ள அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை தவிர்த்து இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து கூடுதல் நேரம் பேசினார்.
மேலும் இந்தியாவுடன் நல்லுறவை பேணிக்காக்க விரும்புவதாக தெரிவித்த ஷெபாஸ் ஷரீப், காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணா விரும்புவதாக கூறினார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ஷெபாஸ் ஷரீப், வறுமைக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
Comments