120 கிலோ மீட்டர் வேகம்.. தாறுமாறு டவேரா கார்.. கால்வாய்க்குள் பாய்ந்தது எப்படி ? சறுக்கிய திகில் காட்சிகள்

0 3904

மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியாலான வேகத்தடுப்பில் மோதாமல் இருக்க 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்ற காரை திருப்ப முயன்றதால், சாலையில் சறுக்கிச்சென்ற கார் தடுப்பு சுவற்றில் மோதி உருண்டு கால்வாய்க்குள் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது  

தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளிலும், நகர்பகுதிகளில் உள்ளூர் சாலைகளிலும் இரவு நேரத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ஏராளமான வேகத்தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

வேகத்தால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுப்பதற்காக சாலையில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளே பெரும்பாலும் இரவு நேரங்களில் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன. அந்தவகையில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த தேமுதிக கொடி கட்டப்பட்டிருந்த தவேரா கார் ஒன்று பரமக்குடி அருகே விபத்தில் சிக்கியது

பரமக்குடி அடுத்த வேந்தோணி கிராம சந்திப்பு அருகே நான்கு வழிச் சாலையின் இரு புறமும் நடுவில் அதி வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பு பேரிகார்டு பகுதியில் வேகம் குறையாமல் கடக்க முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சலைவியில் சறுக்கிச்சென்றது

சாலையில் சருக்கிச்சென்ற வேகத்தில் சென்டர் மீடியனில் மோதி சிமெண்ட் தடுப்பை தாண்டி கார் அப்படியே உண்டு கால்வாய்க்குள் விழுந்தது. இதில் பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் கூறுகையில் அதிகாலை 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் என்ற நினைப்பில் 120 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் சென்றதால், சாலையில் இருந்த தடுப்பு கம்பியை பார்த்ததும் காரின் வேகத்தை குறைக்காமல் எஸ் வடிவில் திரும்பியபோது கார் சறுக்கிச்சென்று செண்டர் மீடியன் மீது மோதி கால்வாய்க்குள் உருட்டு விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.

இரவோ பகலோ மிதமான வேகமே வாகனங்களில் செல்வோரை நலமாக வீடு கொண்டு போய் சேர்க்கும் என்று அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments