பஹ்ரைனில் பீரங்கி குண்டுகளின் முழக்கத்துடன் ரமலான் நோன்பு நிறைவு
பஹ்ரைனில் பீரங்கி குண்டுகளின் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் நிகழ்வை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
கடிகாரங்கள் மற்றும் செல்போன்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முன் பீரங்கி குண்டுகள் முழக்கத்தின் வாயிலாக மக்கள் நோன்பு நேரம் நிறைவடைந்ததை தெரிந்து கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் எகிப்தில் தோன்றிய இந்த வழக்கம் பல வளைகுடா நாடுகளுக்குப் பரவியது.
பஹ்ரைனில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் கூடி இந்நகழ்வை காண தடை விதிக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடந்து, இந்த பாரம்பரிய நிகழ்வை காண ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் வந்தனர்.
Comments