செல்போன் திருடியதாகக் கூறி நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொன்ற இளைஞர்கள் கைது

0 2147
செல்போன் திருடியதாகக் கூறி நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொன்ற இளைஞர்கள் கைது

சென்னையில் செல்போன் திருடியதாகக் கூறி நண்பனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ், அரவிந்த், முகமது ரசூலுல்லா, உதயா ஆகியோர் நண்பர்கள். உதயா வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்று காணாமல் போயிருக்கிறது.

அதனை ரமேஷ்தான் எடுத்ததாக உதயாவிடம் சிலர் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அரவிந்த், முகமது ரசூலுல்லா ஆகியோருடன் ரமேஷின் வீட்டுக்குச் சென்ற உதயா செல்போன் குறித்து கேட்டுள்ளான்.

செல்போனை தாம் எடுக்கவில்லை எனக் ரமேஷ் கூறியதை நம்பாமல் மூவரும் சேர்ந்து இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பெரிய கல் ஒன்றை எடுத்து, ரமேஷின் தலையில் போட்டு கொடூரமாகக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments