அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் திடீரென சாலையைக் கடந்தவர் மீது மோதி விபத்து

0 2543
அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் திடீரென சாலையைக் கடந்தவர் மீது மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே திடீரென சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதி தடுமாறிய பைக் ஒன்று, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி நொறுங்கிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

அம்சி பகுதியை சேர்ந்த சுபின் என்பவரும் எட்விஜிஜோ என்பவரும் தங்களது யமஹா ஆர்15 பைக்கில் நேற்று மாலை கருங்கலில் இருந்து புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

வெள்ளையம்பலம் அருகே அப்பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அதிவேகமாக வந்த பைக்கைப் பார்த்து பதறிய கடைக்காரர் வேகமாக ஓட, அவர் ஓடியதைப் பார்த்து பதற்றமடைந்த சுபின் அவர் மீது மோதாமல் தவிர்க்க பைக்கை திருப்ப முயன்றுள்ளார்.

இருவருடைய அனுமானங்களும் தோல்வியடைந்த நிலையில், கடைக்காரர் மீது மோதிய பைக், அதே வேகத்தில் சென்று பெயர்ப்பலகை ஒன்றின் மீது மோதி, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் எட்வின்ஜிஜோ உயிரிழந்த நிலையில், சுபினும் கடைக்காரரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments