ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது

0 2388

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்ற நிலையில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா உள்ளிட்ட 25 பேர் அமைச்சர் பொறுப்பை ஏற்றனர்.

2019ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அதன் படி, கடந்த வாரம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இதனை அடுத்து, ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 12 பேரும், புதியவர்கள் 13 பேரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றனர். அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிச்சந்திரன், அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments