தமிழகத்தில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தென்தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்றும், வருகிற 13 ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்கள், வடதமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
14 ஆம் தேதி உள்தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Comments