காஞ்சிபுரத்தில் அமைய உள்ள மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.. சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைகிறது
காஞ்சிபுரத்தில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான தொழில் நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்போரூர் தாலுகாவில், 500 ஏக்கர் பரப்பில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடைபெறும் வகையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைய உள்ளது.
அதற்கான, தொழில் நுட்ப ரீதியிலான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை, விளையாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments