பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷிக்கு மனைவியின் வரி விவகாரத்தால் சிக்கல்.. விளக்கம் அளித்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி சுனக் கடிதம்
தாம் எப்போதும் விதிகளைப் பின்பற்றி வருவதாக பிரிட்டன் பிரதமருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கின் மனைவியும், நாராயணமூர்த்தியின் மகளுமான அக்சதா, இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு விழுக்காடு பங்குகளை வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறாததால் வெளிநாடுகளில் இருந்து பெறும் வருமானத்துக்கு விதிப்படி வரி செலுத்த வேண்டியதில்லை எனக் கூறப்படுகிறது.
குடியுரிமை பெறாமல் பிரிட்டனில் தங்கியுள்ள அக்சதா வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்தாமல் இருப்பது, நிதியமைச்சரான ரிஷிக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி எழுதியுள்ள கடிதத்தில், தான் அமைச்சராகப் பொறுப்பேற்றபோதே தனது சொத்து விவரங்களை அறிவித்துள்ளதாகவும், தனது சொத்து விவரங்கள் குறித்து மறு ஆய்வு செய்தால் அது மேலும் விளக்கம் அளிப்பதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments