உக்ரைனின் விமான நிலையம் ரஷ்ய படைகளால் குண்டுவீசித் தாக்கி அழிப்பு

0 2477
உக்ரைனின் விமான நிலையம் ரஷ்ய படைகளால் குண்டுவீசித் தாக்கி அழிப்பு

உக்ரைன் மத்திய நகரமான டினிப்ரோவின் விமான நிலையத்தை ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்கி முற்றிலுமாக அழித்து விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், லுஹான்ஸ்க் மற்றும் டினிப்ரோ பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பயன்படுத்த முடியாத அளவுக்கு விமான நிலையம் உருக்குலைந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஊழியர்கள் 6 பேர் காயமடைந்த நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments