டிவிட்டர் இறந்து கொண்டிருக்கிறது பிரபல பதிவாளர்கள் பதிவுகள் இல்லை - எலன் மஸ்க்
டிவிட்டர் இறந்து கொண்டிருக்கிறது...சமகாலத்துக்கு அது ஈடுகொடுக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய ஆலோசனை கூறுங்கள் என்று கடந்த வாரம் டிவிட்டரின் போர்டில் இணைந்த எலன் மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக அதிகளவிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாகவும் குறைந்த சொற்களிலும் டிவிட் செய்வதே இதற்கான காரணம் என்றும் அவர் கூறுகிறார். 9 கோடிக்கும் அதிகமான தொடர்பவர்களைக்கொண்ட டைலர் ஸ்விப்ட் மூன்றுமாதமாக ஒரு பதிவையும் போடவில்லை.
இதே போல் ஜஸ்டின் பெபரும் 11 கோடிக்கும் அதிகமான தொடர்பவர்களைக் கொண்டிருந்த போதும் ஆண்டு முழுவதும் ஒரேயொரு பதிவைத் தான் போட்டுள்ளார்.வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை டிவிட்டரில் கொண்டு வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
எடிட் பட்டன் தேவையா என்று கேட்டு அவர் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலோர் ஆம் என்று பதிலளித்ததால் விரைவில் நீல நிற டிக் கொண்ட பதிவாளர்களுக்கு டிவிட்டரில் எடிட் பட்டன் அமைக்கப்படும் என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Comments