கோவிட் பூஸ்டர் டோஸ் - முதல் நாளில் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே செலுத்தப்பட்டது

0 2395
கோவிட் பூஸ்டர் டோஸ் - முதல் நாளில் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே செலுத்தப்பட்டது

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போட நேற்று முதல் நாளில் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்களே ஆர்வம் காட்டினர்.

18 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்களான பின்னர் 3 வது பூஸ்டர் தடுப்பூசி போடத் தகுதி பெறுவார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்தது.

நேற்று தனியார் மருத்துவமனைகள் உட்பட 850 மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் பூஸ்டர் தடுப்பூசியின் விலையை 225 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments