பொருளாதார நெருக்கடி, பெருந்தொற்றை விட அதிக உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் -இலங்கை மருத்துவக் கழகம் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்றை விட அதிக உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என அந்நாட்டின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் நெருக்கடியான சூழலால், கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதுடன் எரிபொருள், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அந்நாட்டில், பல மருத்துவமனைகளில் வழக்கமான அறுவைச் சிகிச்சைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் அவசர சிகிச்சைகள் கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என இலங்கை மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகம் சில நாட்களுக்குள் சீராகவில்லையெனில், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் மருத்துவக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கொழும்புவில் அவரது அலுவலகம் முன் ஏராளமானோர் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
Comments