சீட்டின் லாக்கை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்..!

0 2164

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

ஒரகடத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் கடந்த 7ம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் 2 லட்சம் பணத்தை எடுத்து அதனை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு முகப்பேறில் உள்ள தனது நண்பரின் கம்பெனிக்கு சென்றுள்ளார்.

பணத்துடன் ஸ்கூட்டரை அவர் வெளியே நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், சிறிது நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சில விநாடி முயற்சியில் சீட்டைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு மற்றொரு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

மர்ம நபர்கள் வங்கியில் இருந்தே அவரை பின் தொடர்ந்து வந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments