கடந்த நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்த மின்சார வாகன விற்பனை..!
இந்தியாவில் மின்சார வாகனங்களில் விற்பனை, கடந்த நிதியாண்டில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த நிதியாண்டில் நான்கு லட்சத்து 29 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மின் வாகனங்களில் இருசக்கர வாகனங்களே அதிகபட்சமாக விற்பனையாகியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் முதலிடத்திலும், ஒகினாவா இரண்டாம் இடத்திலும், ஆம்பியர் வெஹிக்கல்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments