உக்ரைனில் ரஷ்ய போர் விமானங்கள் வான்வழி தாக்குதல்.. 86 ராணுவ நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன
உக்ரைனில் நேற்று மாலை முதல் ரஷ்ய படைகள் போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள 86 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 2 கட்டுப்பாட்டு மையங்கள், 2 வெடிமருந்து கிடங்குகள், 3 எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை ஏவும் 3 அமைப்புகள், உக்ரைன் படைகளின் பலத்த பாதுகாப்பில் இருந்த 49 பகுதிகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களும் அடங்கும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் கூறியுள்ளார்.
Comments