பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும்.. இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநரான நந்தலால் பேச்சு
மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என அதன் புதிய ஆளுநரான நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், மத்திய வங்கியை சுதந்திரமாக நடத்தும் அதிகாரத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனக்கு அளித்துள்ளதாகவும், நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி முடிவெடுக்கக்கூடிய வகையில் மத்திய வங்கியை செயல்படுத்துவதே தனது நோக்கம் என குறிப்பிட்ட அவர், வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
Comments