இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்வு
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை சாமானிய மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
பொதுச்சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை குறைந்த பட்சம் 200 ரூபாய் முதல் 240 ரூபாய் என்ற அளவிற்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்நியச்செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
அதில் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களும் அடங்குவதால் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசு நடத்தி வரும் சந்தோசா மொத்த விற்பனை கடைகளில் சலுகை விலையில் அரிசி விற்கப்பட்டு வருவதாக வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனை கடைகளிலும் அரிசி சலுகை விலையில் விற்கப்படும் போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் இல்லை என்றே தெரிய வருவதாக கொழும்பு பத்திரிகை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments