டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலையாக 42.4 டிகிரி செல்சியஸ் பதிவு

0 1494
டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலையாக 42.4 டிகிரி செல்சியஸ் பதிவு

டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 42 புள்ளி 4 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 72ஆண்டுகளில் ஏப்ரல் முதல் பாதியில் பதிவானவற்றில் அதிகமாகும்.

நாட்டின் வட மேற்கு மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் பகல்பொழுதில் அனல்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று அதிகப்பட்ச வெப்பநிலையாக 42 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இது 1950ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் முதல் பாதியில் பதிவானவற்றிலேயே அதிகமாகும். அது மட்டுமல்லாமல் இந்தக் காலக்கட்டத்தில் இயல்பான வெப்பநிலையை விட இது 8 டிகிரி அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வடமேற்கு இந்தியாவிலும் அதையொட்டிய மத்திய இந்தியாவிலும் வெப்பநிலை மேலும் கடுமையாக உயர்ந்து அனல்காற்று வீசுவது தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments