டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலையாக 42.4 டிகிரி செல்சியஸ் பதிவு
டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 42 புள்ளி 4 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 72ஆண்டுகளில் ஏப்ரல் முதல் பாதியில் பதிவானவற்றில் அதிகமாகும்.
நாட்டின் வட மேற்கு மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் பகல்பொழுதில் அனல்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று அதிகப்பட்ச வெப்பநிலையாக 42 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இது 1950ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் முதல் பாதியில் பதிவானவற்றிலேயே அதிகமாகும். அது மட்டுமல்லாமல் இந்தக் காலக்கட்டத்தில் இயல்பான வெப்பநிலையை விட இது 8 டிகிரி அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வடமேற்கு இந்தியாவிலும் அதையொட்டிய மத்திய இந்தியாவிலும் வெப்பநிலை மேலும் கடுமையாக உயர்ந்து அனல்காற்று வீசுவது தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Comments