நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" திரைப்படத்துக்கு கத்தாரிலும் தடை

0 6693
நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" திரைப்படத்துக்கு கத்தாரிலும் தடை

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் குவைத்தைத் தொடர்ந்து கத்தார் நாட்டிலும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியான நிலையில், அதில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து இருப்பதாகக் கூறி, குவைத்தில் தடை செய்யப்பட்டது.

தற்போது இதே காரணத்துக்காக மற்றொரு அரபு நாடான கத்தாரிலும் பீஸ்ட் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, நடிகர் துல்கர் சல்மான் நடித்த குரூப், நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படங்களும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments