"தி.மு.க. இந்தி மொழிக்கு எதிர்ப்பல்ல" இந்தி திணிப்பையே எதிர்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்தி மொழிக்கு எதிரி அல்ல என கூறிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்தி திணிப்பையே எதிர்ப்பதாக தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விள்ளக்க மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 17 பேரை உயிரிழக்கச் செயத நீட் தேர்வை கட்டாயம் எதிர்ப்போம் என்றார்.
இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கொள்கையில் திமுக மாறாது என்றார். இந்தியாவே உற்று நோக்கக் கூடிய ஆட்சி தமிழகத்தில் நடந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியதாக கூறினார்.
Comments