கவிதையா பாடி நம்ம அண்ணாச்சிக்கு குரலு காய்ஞ்சு போச்சாம்..! முதல் சிங்கிளே… சிக்ஸரா..?!

0 6322
சரவணாஸ்டோர் சரவணனின் நடிப்பில் வெளியாக உள்ள லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சரவணாஸ்டோர் சரவணனின் நடிப்பில் வெளியாக உள்ள லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலை இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.எஸ் ராஜமவுலி வெளியிட்டனர். யூடியூப்பிலும் வெளியாகி உள்ளது.

கல்லூரி மாணவர் பாடுவது போல கவிஞர் பா. விஜய்யால் எழுதப்பட்டுள்ள இந்த பாடலில் , 3 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

முதன் முதலாக சினிமாவில் தோன்றும் நாயகன் போல இல்லாமல் தன்னம்பிக்கையுடன் அண்ணாச்சி போட்டிருக்கும் ஆட்டம் அதகளமாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர்கள் கலர்புல்லாக படமாக்கி உள்ள இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் நடனம் அமைத்துள்ளார். யூத் போல லெஜண்ட் சரவணன், அணிந்து வரும் ஆடைகள் குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments