உக்ரைனின் மைரோரோட் விமான தளத்தில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்

0 1494
உக்ரைனின் மைரோரோட் விமான தளத்தில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்

உக்ரைனில் உள்ள மைரோரோட் விமான தளத்தில் இருக்கும் வெடிமருந்து கிடங்கை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய நிலையில், இது நாள் வரையில் தாக்குதலானது தொடருகிறது.

இந்நிலையில், போல்டாவா பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைன் விமானப்படையின் MiG-29 ரக போர் விமானமும், Mi-8 ரக ஹெலிகாப்டரும் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

மேலும், திநிப்ரோ பிராந்தியத்தில் ஒரு பெரிய வெடிமருந்து கிடங்கும் தாக்கி அழிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments