BSC Blended படிப்பினை மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தும் சென்னைப் பல்கலைக் கழகம்
சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வரும் கல்வியாண்டு முதல் ஒன்றிணைந்த பிஎஸ்சி படிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.
BSC Blended எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஒன்றிணைந்த புதிய பிஎஸ்சி பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகால படிப்பில் முதல் 2 ஆண்டுகள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியவை ஒரே நேரத்தில் பயிற்றுவிக்கப்படும் என்றும், இறுதியாண்டில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் மூலம் M.Sc., பயிலாமல் நேரடியாக Ph.D., சேரும் வாய்ப்பு ஏற்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.
Comments