ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்தியா 35 இலட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல்
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்தியா 35 இலட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய உள்ளதாக உணவுத்துறைச் செயலர் சுதான்சு பாண்டே தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது பன்னாட்டுச் சந்தையில் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப் பல நாடுகள் முன்வந்துள்ளன.
இதனால் கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 4 மாதங்களில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருந்து 35 இலட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
2022 -2023 நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி நூறு இலட்சம் டன்னைத் தாண்டும் எனக் கடந்த வாரத்தில் வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது குறிப்பிடத் தக்கது.
Comments