கட்சிகளின் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த இயலாது.. உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த இயலாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
அதன் விசாரணையின் போது, வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும் போது எடுக்கக்கூடிய முடிவுகளைத் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த சட்டவிதிகள் இல்லாமல் நடவடிக்கை எடுப்பது அதிகாரங்களை மீறுவதாக இருக்கும் என்றும் இலவசங்கள் குறித்த அறிவிப்பு என்பது அரசியல் கட்சியின் கொள்கை முடிவு என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள், தேர்தல் தூய்மையை பாதிப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
Comments