குரூகர் தேசியப் பூங்காவில் சுற்றுலாவுக்கு வசதியாக மாறிய ரயில்பாலம்.. இயற்கை எழிலையும், காட்டு விலங்குகளையும் கண்டுகளிக்க ஏற்பாடு
தென்னாப்பிரிக்காவில் பழைய ரயில் பெட்டிகளை சொகுசு விடுதியாக மாற்றித் தேசியப் பூங்காவில் நிறுத்தி இயற்கைச் சூழலைக் கண்டுகளிக்கும் வகையில் செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசியப் பூங்கா ஆப்பிரிக்க யானை, நீர்யானை, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக உள்ளது.
இங்கு சாபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் பல பத்தாண்டுகளாகப் பயன்பாடற்று உள்ள நிலையில் பழைய ரயில் பெட்டிகளை சொகுசு விடுதிபோல் மாற்றி இந்தப் பாலத்தின் மீது நிறுத்தியுள்ளனர்.
இதில் அமர்ந்தபடி சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலையும் காட்டு விலங்குகளையும் கண்டுகளித்துச் செல்கின்றனர்.
Comments