ஆஸ்கர் அமைப்பின் 10 ஆண்டுகள் தடையை மதித்து, ஏற்பதாக நடிகர் வில் ஸ்மித் அறிவிப்பு
ஆஸ்கர் விருது வழங்கும் விழாக்களில் பங்கேற்க விதிக்கப்பட்ட பத்தாண்டு கால தடையை ஏற்பதாக நடிகர் வில் ஸ்மித் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவின் போது தனது மனைவி குறித்து கருத்து தெரிவித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பின் முடிவை ஏற்பதாக அறிவித்துள்ள வில் ஸ்மித், தான் இந்த முடிவை மதிப்பதாக கூறியுள்ளார்.
Comments