உணவகத்தில் வாங்கிய குருமாவில் புழு.. ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி

0 1974
உணவகத்தில் வாங்கிய குருமாவில் புழு.. ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி

நெல்லை பாளையங்கோட்டையில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டாவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள ஜீவ மன்னா என்ற அந்த உணவகத்தில் பரோட்டா வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதற்காக வழங்கப்பட்ட குருமாவில் புழு இருப்பதைப் பார்த்து ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்து வாக்குவாதம் செய்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, புழு இருப்பதை வீடியோ எடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலக வாட்சப் எண்ணுக்கு அனுப்பினார்.

மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த சங்கரலிங்கம் என்ற அதிகாரி, சமையல் கூடத்தை ஆய்வு செய்து, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார். அந்த அதிகாரி ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் உணவக உரிமையாளர் வியாபாராத்தில் மும்முரமாக இருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments