மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக தகவல்.!
மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதியன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன், அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவருவதற்கான சாத்திக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே மாதத்தில் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments