குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்-இ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்
குஜராத்தில் முதியவர் ஒருவருக்கு எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதன்முறையாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட அந்த வகை வைரஸ், ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு எக்ஸ்-இ வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத்தின் வதோதரா நகராட்சி மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 12ஆம் தேதி, மும்பையில் இருந்து வதோதரா வந்த அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், மரபியல் பகுப்பாய்வு சோதனையில் புதிய வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், சோதனை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மும்பையில், மற்றொரு நபருக்கு 'எக்ஸ்-எம்' வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments