மதுராந்தகத்தில் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த கனரக வாகனம் மீது லாரி மோதி விபத்து.!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த கனரக வாகனம் மீது தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுராந்தகம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கனரக வாகனம் பிரேக் டவுன் ஆனதால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக திண்டுக்கலில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், கனரக வாகனம் சாலையில் சென்றுக்கொண்டிருப்பதாக எண்ணி கவனக்குறைவாக லாரியை இயக்கியதில், நின்றுக்கொண்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறம் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் அவரது உடலை போராடி மீட்டனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments