பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்... தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தும் அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரித் தொடுத்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் பெறப்படுவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரிண்டர் பொருத்த அதிகச் செலவாகும் என்பதால் அதைப் பொருத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மீட்டர் பொருத்தியும் செயல்படுத்தாத ஆட்டோக்களைக் கண்டறியப் போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்பக் கட்டணத்தைத் தானாக மாற்றும் வகையில் மென்பொருளைப் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
Comments