ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது

0 2546

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டான்.

வேப்பூரைச் சேர்ந்த பட்டத்தாள் என்ற 75 வயதான மூதாட்டி கடந்த 6ம் தேதி கழுத்து நெரித்து கொல்லப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இதையடுத்து வேப்பூர் பகுதியில் உள்ள நகை அடகு கடைகளில் போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவன் மூதாட்டியின் நகையை அடகு வைத்தது தெரியவந்தது.

பெரம்பலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மூதாட்டியைக் கொன்று நகைகளை பறித்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments