நடிகர்களின் முத்தம்..! மேடையில் காண்டான சினிமா தயாரிப்பாளர்..! கருப்பு பணம் பதுக்குவதாக குற்றச்சாட்டு

0 5440

தமிழ் திரையுலக நடிகர்கள் தயாரிப்பாளரிடம் பெறும் சம்பளத்தை கருப்பு பணம் போல ஒதுக்கி வைப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் புதிய படம் ஒன்றின் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பராதிராஜா தயாரிப்பாளர்கள் கே.ராஜன், கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பெரிய நடிகர்கள் திரைப்படங்களிலும் இச் இச் இச் என்கிறார்கள், படத்தை பார்க்கும் தாய்மார்கள் முகம் சுழிக்க கூடாது என்றார். தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் ரஜினி பண்பாடு காப்பாற்றுவார் என்றும் பேசினார்.

தமிழகத்து மக்கள் நல்ல படங்களை பார்க்க விருப்ப படுவதாகவும், ஒவ்வொரு படத்திலும் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள் என்றும் கூறினார் ..! நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை கருப்பு பணம் போல் ஒதுக்கி வைக்கிறார்கள் என்றும் படத்தின் டப்பிங் முடியும் முன்பே பணம் கேட்க கூடாது என்றும் நடிகர்களை கடுமையாக சாடினார் தயாரிப்பாளர் ராஜன்.

மேலும் தன்னுடைய கோரிக்கையை பாரதிராஜா தலைமை ஏற்று தீர்த்து வைக்க வேண்டும் என்றதோடு விழாவிற்கு வராத படத்தின் கதாநாயகியை, இப்போதே நயன்தாரா ஆகிவிட்டாரா என கே.ராஜன் கேட்க அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் சொன்னது போலவே தானும் சினிமாவுக்கு வரும் முன்பே வடபழனியில் சோற்றுக்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டேன் என கூறினார். தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுவது போல யாரையும் குறை சொல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

சினிமா உலகில் யாருக்கு தான் ஆசை இல்லை என்று பாரதிராஜா பேசி கொண்டிருந்த போது, தன்னுடைய கோரிக்கைக்கு பதில் சொல்லுங்க என்று கே.ராஜன் கேட்டார். உங்க பிரச்சினை இப்போது தீருவதில்லை, இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமாக பேசித் தீர்ப்போம் என செல்லமாக கலாய்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments