ரூ.417 கோடி மதிப்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு வணிக ரீதியிலான முதல் ஆராய்ச்சி பயணம்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு வணிக ரீதியிலான முதல் ஆராய்ச்சி பயணத்தை 417 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அக்சியம் என்ற தனியார் நிறுவனம், விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முதல் முறையாக முற்றிலும் வணீக ரீதியிலான வீரர்களை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி உள்ளது.
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் வீரர்கள் புறப்பட்டனர். முன்னாள் நாசா வீரர் தலைமையிலான 4 பேர் கொண்ட வணிகக் குழு ஏறத்தாழ 8 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments