1,901 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் அநாயசமாக நடந்து பிரேசில் வீரர் சாகசம்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!

0 1825

பிரேசிலில் ஆயிரத்து 900 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்த வீரர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஸ்லக்லைன் வாக் விளையாட்டு வீரரான ரபேல் ஜுங்கோ பிரிடி, தரையில் இருந்து ஆயிரத்து 900 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய இரு ராட்சத பலூன்களுக்கு நடுவில் கயிற்றில் நடந்து சாதனை படைத்தார்.

அந்தரத்தில் தொங்கிய கயிற்றில் ஆபத்தான விளையாட்டை அநாயசமாக செய்து காட்டிய ரபேலின் வீடியோவை கின்னஸ் புத்தகம் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments