சட்டப்பேரவையில் விவாதிக்க நிபந்தனைகள் விதிக்க முடியாது.. இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா? எடப்பாடி கேள்வி
சட்டப்பேரவையில் விவாதிக்க நிபந்தனைகள் விதிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா? என கேள்வி எழுப்பினார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வியெழுப்பினார். அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் 600 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வங்கிகளுக்கு வழங்கப்படாத நிலையில், தற்போதைய அரசு அதனை செலுத்தியதாக குறிப்பிட்டார்.
அப்போது பேசிய, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உறுப்பினர் வேறு கேள்விக்கு சென்றால் மட்டுமே, விவாதம் தொடராது என்றார்.. குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது ஜனநாயக நாடு என்றும் விவாதிக்கவே சட்டப்பேரவை கூடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments