குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதை எதிர்த்த நில உரிமையாளர்.. ஆபாசச் சொற்களால் வசைபாடிய பஞ்சாயத்துத் தலைவரின் கணவர்

0 2687
குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதை எதிர்த்த நில உரிமையாளர்.. ஆபாசச் சொற்களால் வசைபாடிய பஞ்சாயத்துத் தலைவரின் கணவர்

நாமக்கல் அருகே தனது நிலம் வழியாக குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளரையும் அவரது தாயாரையும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆபாசச் சொற்கள் பேசி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

எருமபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனங்கிப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் லதா, இவரது கணவர் நடராஜ். இவ்வூரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழாயின் ஒரு பகுதியை தர்மலிங்கம் என்பவரது விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல, பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்கு தர்மலிங்கம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடராஜ் அவர்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடராஜ் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments