புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய சீனா.!
பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைக்கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியது.
வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள Jiuquan ஏவுதளத்தில் இருந்து, ‘Gaofen-3 03’ என்ற செயற்கைக்கோள், ராக்கெட் மூலம் நேற்று காலை 7 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
நம்பகமானதும் நிலையானதுமான உயர் தெளிவுத்திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் ரேடார் படங்களை பெறவும், நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், வன கண்காணிப்பு மற்றும் அவசரகால பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றிக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Comments