அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் புல் தரையில் விழுந்து விபத்து.!
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய சரக்கு விமானம் ஓடுதள பாதையை விட்டு விலகி புல்தரையில் விழுந்ததில் விமானத்தின் வால் பகுதி உடைந்து சேதமானது.
கவுதமாலா நோக்கி சென்ற டி.எச்.எல். சரக்கு விமானத்தின் ஹைட்ராலிக் பகுதியில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கோஸ்டா ரிக்கா நாட்டின் ஜுயான் சாண்டா மரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து புல்தரையில் விழுந்து வால் பகுதி உடைந்து சேதமானது விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விமான சேவைகள் ரத்தால் ஏறத்தாழ 8ஆயிரத்து 500 பயனிகள் பாதிப்படைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments