இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் - ரிசர்வ் வங்கி

0 2061
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பணக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதம் மாற்றமின்றி 4 விழுக்காடாகத் தொடரும் எனத் தெரிவித்தார்.

வங்கிகளின் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வழங்கும் வட்டி விகிதமும் மாற்றமின்றி மூன்றரை விழுக்காடாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 9 விழுக்காடாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் நூறு டாலர் எனக் கொண்டு, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments