"நடமாடும் மருத்துவமனை" வாகனங்கள் மூலம் கிராமம் தோறும் முருத்துவ சேவை.. தொடங்கிவைத்தார் முதலமைச்சர்..
தமிழகத்தில் கிராமம் தோறும் சென்று மருத்துவ சேவை வழங்கும் நடமாடும் மருத்துவமனை வாகனங்களை சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இரத்தம் , சளி , சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வக வசதியுடன் கூடிய இவ்வாகனங்களில் தலா ஒரு மருத்துவர் , செவிலியர் , மருத்துவப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை , காச நோய் , நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சை உட்பட அடிப்படை சிகிச்சைகளை வழங்கும் விதமாக அமைந்துள்ள 389 வாகனங்களை முதலமைச்சர் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
Comments