850 ல் பீஸ்ட் ரிலீஸ்.. கே.ஜி.எப் 2 க்கு இப்படி ஒரு சிக்கலா.? டப்பிங் படம் டாப்பாகுமா.!

0 3506

தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 850 திரையரங்குகள் வரை ஒதுக்கப்பட்டு விட்டதால் கே.ஜி.எப் திரைப்படத்துக்கு 200 திரையரங்குகளே ஒதுக்க இயலும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். டப்பிங் திரைப்படம் என்று முத்திரை குத்தப்பட்டதால் கே.ஜி.எப்.-2க்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழ் புத்தாண்டையொட்டி பீஸ்ட், கேஜிஎப் 2 ஆகிய படங்கள் ஒருநாள் முன்பின்னாக வெளியாக உள்ளது. சன் பிக்சர்சின் படம் என்பதால் பீஸ்ட்டுக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும் போது, விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாலும், கே.ஜி.எப் 2 படத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாவதாலும் 800 முதல் 850 திரையரங்குகளை பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் டப்பிங் படம் என்பதால் கே.ஜி.எப் 2 படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

டிரிபிள் ஆர் படம் இந்தியா முழுவதும் வசூலில் பட்டையை கிளப்பினாலும் தமிழகத்தில் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாத அளவிலேயே வசூலித்துள்ளதால் டப்பிங் படத்தை திரையிட தனி திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புவதில்லை என்றும், மால்களில் உள்ள திரையரங்குகளில் தான் கே.ஜி.எப் 2 படம் அதிகமாக திரையிடப்பட உள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணி தெரிவித்தார்.

டப்பிங் படம் என்று எழுந்துள்ள விமர்சனம் குறித்து படத்தின் நாயகன் யாஷ் கூறுகையில், கே.ஜி.எப் 2 மட்டுமல்ல எல்லா படங்களிலுமே நடிகர்கள் டப்பிங் பேசுவார்கள் என்றும், ஒரு படத்திற்கு திரையரங்குகள் கூடுவதும் குறைவதும் படத்தின் வெற்றியை பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் மாறும் என்றும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments