குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டம் -அமைச்சர் முரளிதரன்

0 2671

நாட்டில் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் குடிமக்கள் அனைவருக்கும் நடப்பு ஆண்டில் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், மாதிரி இ-பாஸ்போர்ட் குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும், அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முழு அளவிலான உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, இ- பாஸ்போர்ட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ள மைக்ரோசிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்களுடன் பயோமெட்ரிக் தரவுகளுடன், நாசிக்கில் தயாரிக்கப்படுவதாகவும் அதற்காக 4.5 கோடி மைக்ரோசிப்-புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments