ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை நிறுத்த வேண்டும் என ஜெர்மனி நாடாளுமன்றம் முன் உக்ரைனியர்கள் போராட்டம்

0 1897
ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை நிறுத்த வேண்டும் என ஜெர்மனி நாடாளுமன்றம் முன் உக்ரைனியர்கள் போராட்டம்

ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ள உக்ரைனியர்கள் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து 3 லட்சம் உக்ரைனியர்கள் ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது உடனடியாக சாத்தியப்படக்கூடிய விஷயம் அல்ல என ஜெர்மனி நிதி அமைச்சர் லிண்ட்னெர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments