மனிதர்களால் கடத்தி செல்லப்பட்ட 163 விலங்கினங்கள் மீட்பு.. மீட்கப்பட்ட விலங்குகள் சிகிச்சைக்குப் பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டன

0 2055
மனிதர்களால் கடத்தி செல்லப்பட்ட 163 விலங்கினங்கள் மீட்பு.. மீட்கப்பட்ட விலங்குகள் சிகிச்சைக்குப் பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டன

கொலம்பியாவில் உள்ள காசநாரி மாகாணத்தில் மனிதர்களால் கடத்திச்செல்லப்பட்ட 163 விலங்கினங்களை மீட்டு, அவற்றை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உப்புநீர் ஏரி மற்றும் வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

எறும்புத்திண்ணிகள், ஆமைகள், மக்காவ் கிளிகள், டக்கன் எனப்படும் பழந்தின்னி பறவைகள், சிறுத்தை உள்ளிட்ட இனங்களும் அதில் அடங்கும்.

கால்நடை மருத்துவர்களும் மூலம் அவற்றிற்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியத்துடன் அவற்றை அவற்றின் வாழ்விடத்திற்கு கொண்டு சென்று கார்ப்போரினோகியூவா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் விடுவித்தனர்.

அவர்கள் கடந்த ஆண்டில் மட்டும்  மனிதர்களால் சட்டவிரோதமாக கடத்திச்செல்லப்பட்ட ஆயிரத்து 200 விலங்குகளை வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments